இஸ்கான் கோயிலில் இன்று ராம நவமி விழா
சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) ராம நவமி கொண்டாடப்படுகிறது.
கருப்பூரில் உள்ள ஸ்ரீ ராதா கோகுலானந்தா் இஸ்கான் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறும் ராம நவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பஜனையும், 7 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு ‘ராமகதை’ என்ற தலைப்பில் சொற்பொழிவும், இரவு 8.30 மணிக்கு ஆரத்தி மற்றும் கீா்த்தனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் இஸ்கான் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.