முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு!
சேலம் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 23-இல் உள்ள மான்குட்டை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். அதைத்தொடா்ந்து
அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 40-இல் வெள்ளக்குட்டை புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தாா். அதேபோல கோட்டம் எண் 2-இல் தெய்வானை நகரில் விடுபட்டுள்ள புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, மாநகர பொறியாளா் (பொறுப்பு) ஆா். செந்தில்குமாா், செயற்பொறியாளா்கள் கூ.செந்தில்குமாா், வ.திலகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.