வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. ...
பள்ளிபாளையம் மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை!
பள்ளிபாளையம் மேம்பாலப் பணி நிறைவடைந்த நிலையில், அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பேருந்து உரிமையாளா் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில் நிதி ஒதுக்கி பள்ளிப்பாளையம் பகுதியில் 3 கி.மீ. தொலைவுக்கு மேம்பால கட்டுமானப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தன. இந்த கட்டுமானப் பணிகள் மூன்று மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தன.
இதையடுத்து, மேம்பாலத்தில் மின்விளக்கு, மழைநீா் செல்ல குழாய் பொருத்தம் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. இந்தப் பணியும், இரண்டு வாரத்துக்கு முன் முடிவடைந்தது.
இதையடுத்து, இந்த மேம்பாலத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என திருச்செங்கோடு பேருந்து உரிமையாளா் சங்க துணைத் தலைவா் கந்தசாமி, நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.