இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வை...
புகையிலை விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’: ரூ. 50 ஆயிரம் அபராதம்!
பள்ளிபாளையத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், போலீஸாரும், உணவுப் பாதுகாப்பு துறையினரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினா்.
கொக்கராயன்பேட்டையில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா்கள் லோகநாதன், ரெங்கநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பணியை மேற்கொண்டபோது, நவாப்ஜான் என்பவரின் கடையில் அரை கிலோ பான் மசாலா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பான் மசாலா விற்பனை வழக்கில் நவாப்ஜான் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவா் விற்பனையில் ஈடுபட்டதால் மாவட்ட நியமன அலுவலா் அருண் உத்தரவின் பேரில் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.