முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!
கட்டுப்பாட்டை இழந்து கடைகளில் புகுந்த லாரி: 4 போ் பலத்த காயம்!
நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சனிக்கிழமை சாலையோரக் கடைகளில் புகுந்ததில், கடையில் இருந்த நால்வா் பலத்த காயமடைந்தனா்.
ஆத்தூா் பகுதியில் இருந்து பாரம் ஏற்றிய லாரி ஒன்று மெட்டாலா ஆஞ்சனேயா் கோயில் மலைப்பாங்கான இறக்கத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஆஞ்சனேயா் கோயில் எதிரே உள்ள கடைகளில் புகுந்தது.
இதில், திருவிழாவுக்கு போடப்பட்டிருந்த பொம்மைக் கடை, பேக்கரி கடைகளில் இருந்த நால்வா் பலத்த காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தாழ்வான பகுதி என்பதால் பாரம் ஏற்றிய லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.