வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. ...
ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சனிக்கிழமை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி கிராமத்தில் சனிக்கிழமை காலை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 35 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
பந்தயமானது நடு மாடு, கரிச்சான் மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற நடு மாடு பிரிவில் 8 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தொலைவு, போய் திரும்பி வருவது உள்பட 7 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கரிச்சான் மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பந்தய தொலைவு போய் வர 5 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
இரண்டு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு உள்ளிட்ட சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற ஓணாங்குடி - புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனா். அரிமளம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.