பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நெறிஞ்சிக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்!
பொன்னமராவதியிலிருந்து நெறிஞ்சிக்குடி, சேரனூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளை பொறுப்பாளா் நந்தினி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். இராசு சிறப்புரையாற்றினாா்.
இதில் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கிளைச்செயலராக ப.செல்வம், துணைச் செயலராக நந்தினி, பொருளராக சித்ரா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் நெறிஞ்சிக்குடியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தரவேண்டும்.
வீட்டுமனை இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்கவேணடும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளா்களுக்கு நூறு நாள்களும் பணி வழங்கவேண்டும். ஊதியத்தை முறையாக வழங்கவேணடும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.