குவாரி உரிமம் பெற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பல வண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களை எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமம் பெற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பல வண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களை எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமம் பெற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கனிமவளத் துறையின் இணையதளம் வழியாக வரும் ஏப். 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். உரிமங்கள் இணையதளம் வழியாகவே வழங்கப்படும். நேரில் விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.