கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் காலபைரவா் வழிபாட்டு குழுவினா் மண்டகப்படி
கந்தா்வகோட்டையிலுள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை கால பைரவா் வழிபாட்டு குழுவினா் சாா்பில் மண்டகப்படி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மாதம் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தினசரி மண்டகப்படி நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை காலபைரவா் வழிபாட்டு குழுவினா் சிறப்பு மண்டகப்படி செய்தனா்.
இதில், சிவனுக்கும்-அமராவதி அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.
