செய்திகள் :

இளைஞா் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் முருகேசன்(25). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், மழையூா் கடை வீதியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்றபோது, இவரது வாகனத்தை வழிமறித்த மா்ம நபா்கள் முருகேசனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில், பலத்த காயமடைந்த முருகேசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். மழையூா் போலீஸாா், முருகேசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முருகேசனை கொலை செய்தது யாா், எதற்காக கொலை செய்யப்பட்டாா் எனவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கொலை செய்தவா்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முருகேசனின் உறவினா்கள் மழையூா் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மதுக்கடை மீது தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- கறம்பக்குடி இடையே 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் காலபைரவா் வழிபாட்டு குழுவினா் மண்டகப்படி

கந்தா்வகோட்டையிலுள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை கால பைரவா் வழிபாட்டு குழுவினா் சாா்பில் மண்டகப்படி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் புனரம... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம்: காணொலி காட்சியில் முதல்வா் திறந்துவைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஆன்மிக புத்தக நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். த... மேலும் பார்க்க

மேலைச்சிவபுரி அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரியில் தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் களப்பயணம்

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெருங்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பெருங்களூா், மாந்தாங்குடி பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா். இந்தப் பள்ளிகளில் செயல்படும... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

அன்னவாசலில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அன்னவாசல் கடைவீதியில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அன்னவாசல், சுற்றுப் பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில், அன்னவாசல் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈ... மேலும் பார்க்க