புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
அன்னவாசலில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ற நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அன்னவாசல் கடைவீதியில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, குணசேகா் என்பவா் தனது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸாா், அவரை கைது செய்து அவா் வைத்திருந்த குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.