புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை! - ரூ.1...
சத்தீஸ்கரின் 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானாவில் சரண்!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்டு அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்பட 86 மாவோயிஸ்டுகள் இன்று (ஏப்.5) பத்ராத்ரி கொதாகுடெம் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் சரண்டைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் செயுதா நடவடிக்கையின் கீழ் வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்களை அறிந்து அவர்கள் தற்போது சரணடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் பகுதி உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த 4 பேரை பிடிக்க ஒவ்வொருவரின் மீதும் தலா ரூ.4 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தாண்டு துவங்கியதிலிருந்து 224 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்டு கொள்கைகள் அனைத்து தற்போது செயல்படாது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் மாவோயிஸ்ட்டுகள் நிறுவிய வெடிகுண்டு தாக்குதலினால் பலியானார். மேலும், படுகாயமடைந்த மற்றொரு பெண்ணுக்கு ஒரு கால் முழுவதுமாக சிதைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.