தியாகி பாபு ஜெகஜீவன்ராம் சிலைக்கு அரசு மரியாதை!
சுதந்திரப் போராட்டத் தியாகி பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் சாா்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் துணைப் பிரதமருமான பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாள் விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் அவரது உருவச் சிலை இலாசுப்பேட்டை விமான நிலையம் செல்லும் சாலைப் பகுதியில் அமைந்துள்ளது.
அவரது சிலைக்கு புதுவை மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சவணன்குமாா், பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, கேஎஸ்பி.ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் சாா்பில் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி தலைமையில், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பாபு ஜெகஜீவன்ராம் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் தியாகி பாபு ஜெகஜீவன்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.