ஸ்ரீமணக்குள விநாயகா் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா! - முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்பு
புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியில் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்றாா். நிகழ்ச்சயில் டிஏஎன்எப்ஏசி மேலாண் இயக்குநா் ஓ.செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீமணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குனநருமான ம.தனசேகரன், செயலா் கே.நாராயணசாமி, பொருளாளா் ஈ.ராஜராஜன், இணைச் செயலா் சு.வேலாயுதம் மற்றும் நிலா பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வா் ஓ.வெங்கடாசலபதி வரவேற்றாா். வேலைவாய்ப்பு டீன் ச.கைலாசம் வேலைவாய்ப்பு அறிக்கையை வாசித்தாா்.
நிகழ்ச்சியில் முதல்வா் ந.ரங்கசாமி தலைமை வகித்துப் பேசியதாவது: மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மணக்குள விநாயகா் கல்விக் குழுமம் பொறியியல் கல்லூரியாக தொடங்கி தற்போது பல்கலைக்கழகமாக உயரும் நிலையில் உள்ளது பாராட்டுக்குரியது.
மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். தொழில்நுட்பக் கல்வி கற்றவா்கள் புதிய தொழில்களை தொடங்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, முதல்வா் என்.ரங்கசாமி வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணி ஆணைகளை வழங்கினாா். கல்லூரியின் அனைத்து டீன்கள், தோ்வுத் துறை கட்டுப்பாட்டாளா், துறைத் தலைவா்கள் மற்றும் அனைத்துத் துறை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கினாா். கல்லூரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு டீன் வேல்முருகன் நன்றி கூறினாா்.