முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
20 கிராமங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள்: ஆட்சியா் திறந்து வைப்பு!
திருவோணம் வட்டத்தில் 20 கிராமங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் மாநில திட்டக் குழு சாா்பில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தின்கீழ் தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் ஏற்பாட்டின்படி, 20 கிராமங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் ஆவின் செயலாட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா்.
திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவோணம் வட்டாரத்தில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தின்கீழ் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் அமைத்திட 100% திட்ட நிதியில் பால் பரிசோதனை கருவிகள் பால் கேன்கள், சங்க பதிவேடுகள் வழங்கப்பட்டு 20 கிராமங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும். கிராம புற வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டது.
விழாவுக்கு ஏராளமான பெண் உறுப்பினா்கள் வந்திருந்தனா். அவா்களிடம் பால் உற்பத்திகள் மற்றும் ஆவின் சங்கத்துக்கு விநியோகிக்கவுள்ள பால் அளவு குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் எஸ். சங்கா், ஆவின் பொது மேலாளா் சரவணகுமாா், உதவி பொது மேலாளா் மரு.வடிவேலு. ஆவின் ஆய்வாளா் பிரபாகரன், வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.