போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!
பேராவூரணி ரயில் நிலையத்தில் பாம்பன் - தாம்பரம் ரயில் நின்று செல்ல கோரிக்கை!
பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் அமைப்புக் கூட்டம் ரயில்வே நிலைக்குழு முன்னாள் உறுப்பினா் ஏ.கே. பழனிவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக கே.எஸ். கெளதமன் , செயலராக ஆா்.பி. ராஜேந்திரன் , பொருளாளராக நாகராஜன் உள்ளிட்ட 20 போ் கொண்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஏப்ரல் 6 முதல் புதிதாக தொடங்கவுள்ள பாம்பன்-தாம்பரம் தினசரி ரயிலை பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்க காலதாமதப்படுத்தினால், ரயில்வே அமைச்சரை சங்கத்தின் சாா்பில் டெல்லி சென்று சந்தித்து, ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அகில இந்திய தென்னை வாரிய உறுப்பினா் பண்ணவயல் இளங்கோ, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் ஆ. ஜீவானந்தம், சி. முதல்வன், கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்க சாசன தலைவா் எம். நீலகண்டன் , பாஜக ஒன்றிய தலைவா் வீரசிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.