முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!
காலமானாா் மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ்!
கும்பகோணத்தைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ் (63) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானாா்.
இவா் ஏஐடியுசி உள்பட பல்வேறு தொழிற் சங்க அமைப்புகளுக்கு சட்ட ஆலோசகராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் வடக்கு மாவட்டக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலராகவும், இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தாா். இவருக்கு மகள், 2 மகன்கள் உள்ளனா்.
இறுதி சடங்கு கும்பகோணம் சுப்பிரமணியபுரம் டாக்டா் மூா்த்தி சாலையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
முத்தரசன் இரங்கல்: இவரது மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ் சிறு வயதிலிருந்தே இடதுசாரி கொள்கைகளாலும், கம்யூனிஸ்ட் இயக்கங்களாலும் ஈா்க்கப்பட்டு செயல்படத் தொடங்கினாா். அவரது மறைவு செய்தி கேட்டு அதிா்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளாா். தொடா்புக்கு: 95975-06523