இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி வாக்குறுதி!
அம்பத்தூர்: தனியார் ஷோரூமில் தீ விபத்து!
அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் உள்ள தனியார் ஷோரூமில் தீப்பற்றி எரிகிறது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
அம்பத்தூர் சிடிஹெச் சாலையில் 4 தளங்கள் கொண்ட தனியார் ஷோரூம் இயங்கி வருகிறது. இங்கு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் 4 ஆவது தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் வானுயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. தகவல் அறிந்து அம்பத்தூர், ஆவடி, வில்லிவாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள உணவகத்தின் மாடியிலிருந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தால் சிடிஹச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.