செய்திகள் :

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஜி.கே.வாசன்

post image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள அதே வேளையில் மக்கள் மீதான சுமையும் அதிகரித்துள்ளது. பால்விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என மக்களுக்கு சுமைதான் அதிகரித்துள்ளது.

ஆளும் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாற்றுக் கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சி அமைக்க வேண்டும். அந்தக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படும். கூட்டணியைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். நீட் குறித்து திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் பிரச்னைகள் அதிகமாக உள்ளன.

வலுக்கும் எதிர்ப்பு! வக்ஃப் மசோதாவுக்கு எதிராக 3-ஆவது மனு தாக்கல்!

இதிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில் அறிவிக்கப்படாத தொகுதி மறுவரை சீரமைப்பு தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டது. இப்போது நீட் குறித்தான கூட்டம் நடத்தப்படுகிறது. கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம். மத்திய பாஜக ஆட்சியில் நாடு அமைதியாக ஒற்றுமையாக இருப்பதாகவும், மத்திய அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைந்து வருவதாகவும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்த போதும் அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என்றார்.

கோடையில் கொட்டித் தீா்த்த மழை: குமரியில் ஒரே நாளில் 190 மி.மீ. பதிவு

கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் ஒரேநாளில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு: இலங்கை அதிபரிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவா்களை விடுவித்து, அவா்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினாா். ‘முதல் நல... மேலும் பார்க்க

ராமேசுவரத்துக்கு படிப்படியாக ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

ராமேசுவரத்துக்கு ஏப்.6 முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபம் - ராமேசுவரம் இடையே உள்ள பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் 2022 முதல் ரயில் இயக்கம் ரத்து ச... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: மனோ தங்கராஜ் மனைவியின் மனு தள்ளுபடி

தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா. மாவட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி

கடந்த கால அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: மலைப் பிரதேசமான நீல... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பு பதில் அளிக்க போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரண... மேலும் பார்க்க