செய்திகள் :

உலகில் அதிக மதிப்புமிக்க நாணயங்கள் இவைதான்! என்ன காரணம் தெரியுமா?

post image

கடிகாரம் முதல் ஆடைகள் வரை அனைத்து வகையான பொருள்களால் சேகரிப்பாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது சில பொருள்கள் மீதான ஈர்ப்பினால் அதனை வாங்கி சேர்க்கிறார்கள்.

இந்த வரிசையில் நாணயங்கள் இடம்பெறுகின்றன. சிறிய மற்றும் வட்ட வடிவ நாணயங்கள் அந்த காலத்தில் மிகப்பெரிய பங்கை கொண்டிருந்தன. தற்போது வரைக்கும் இதற்கான மவுசு குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நாணயங்களை அவ்வளவு மதிப்பு கொடுத்து வாங்குகிறார்கள். அப்படி உலகின் மிகவும் அரிதான மற்றும் மதிப்புமிக்க நாணயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

The 1794 Flowing Hair Silver Dollar

The 1794 Flowing Hair Silver Dollar

இந்த நாணயம் இப்போது வரை விற்கப்பட்ட மிகவும் விலை உயர்ந்த நாணயமாகும். சில நிபுணர்களின் கூற்றுப்படி, இது அமெரிக்க நாணய சங்கத்தால் முதல் முதலில் பெறப்பட்ட டாலராகும். இதுபோன்ற 1800-க்கும் குறைவான நாணயங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2022 ல் ஒரு $12 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

The 1787 Brasher Doubloon

இந்த நாணயம் 18 ஆம் நூற்றாண்டில் நியூயார்க் நகர வெள்ளி தொழிலாளியான எஃப்ரைம் பிரேஷரால் உருவாக்கப்பட்டது. இதன் முன்பக்கம் உதய சூரியனுடன் கூடிய மாநில முத்திரையைக் கொண்டிருக்கும். பின்புறம் ஒரு கேடயத்துடன் கழுகு இருக்கும் . இந்த நாணயம் 2021 ஆம் ஆண்டில் ஒரு $, 9.36 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

The 723 Umayyad Gold Dinar

இந்த நாணயம் சவுதி அரேபியாவை குறிப்பிடும் முதல் இஸ்லாமிய நாணயமாக உள்ளது.

2011ல் ஏலம் விடப்பட்ட இந்த நாணயம் சுமார் 6 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இது இரண்டாவது மிக விலை உயர்ந்த நாணய விற்பனையாகும்.

The 723 Umayyad Gold Dinar

The 1343 Edward III Florin

இந்த தங்க நாணயம் மிகவும் அரிதானதாக உள்ளது. அதற்கு காரணம் இதுபோன்று மூன்று நாணயங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஆய்வு செய்பவரால் இந்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏலத்தில் சுமார் $850,000 க்கு விற்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு டைன் (tyne) நதியில் இதுபோன்ற இரண்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன.

The 2007 Canadian Gold Maple Leaf

The 2007 Canadian Gold Maple Leaf

சுமார் 100 கிலோகிராம் எடையுள்ள இந்த நாணயம் இதுவரை தயாரிக்கப்பட்ட தூய தங்க நாணயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாணயமும் $1 மில்லியன் மதிப்பை கொண்டவை. இது 2010 இல் $4 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இவ்வளவு விலை கொடுத்து இந்த நாணயங்களை வாங்குவதால் தான் இவை உலகின் மதிப்புமிக்க நாணயங்களாக உள்ளன.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திருநெல்வேலி நீர், நிலம், மனிதர்களிடையே நாறும்பூநாதன் பெயர் என்றும் ஒலிக்கும்!

திருநெல்வேலியின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கியவரும், தமிழக அரசின் உ.வே.ச விருதைப் பெற்றவருமான பெருமைக்குரிய எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் உடல்நலக் குறைவால் (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64... மேலும் பார்க்க