செய்திகள் :

கோ-ஆப்டெக்ஸ் உதவி விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்: அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

post image

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு புதியதாக தெரிவு செய்யப்பட்ட உதவி விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு முதல்வரால் பணி ஆணை வழங்கப்பட்ட 166 உதவி விற்பனையாளர்களுக்கு சிறப்புவாய்ந்த வணிக ஆலோசனை நிறுவனத்தின் மூலம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் பயிற்சி முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு!

பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசும் அமைச்சர் காந்தி-பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள உதவி விற்பனையாளர்கள்

இந்த பயிற்சி முகாமில் உதவி விற்பனையாளர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை பற்றியும் கோ-ஆப்டெக்ஸில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ரகங்களை பற்றியும் விற்பனையை மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் கைத்தறி பொருள்கள் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துதல் பற்றி வணிக ஆலோசனை நிறுவனத்தின் மூலம் விரிவாக விளக்கப்படவுள்ளது.

மேலும், இந்த உதவி விற்பனையாளர்களை இரண்டு நாள்களிலும் சென்னையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நேரில் அழைத்து சென்று நேரடி விற்பனை பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர் வே.அமுதவல்லி, கைத்தறி துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி

கடந்த கால அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: மலைப் பிரதேசமான நீல... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பு பதில் அளிக்க போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரண... மேலும் பார்க்க

விளையாட்டுத் துறை புதிய திட்டங்கள்: துணை முதல்வா் ஆலோசனை

விளையாட்டுத் துறை சாா்பிலான பெரும் திட்டங்கள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் சென்னைக்கு அருகே அமையவுள்ள உலகளாவிய விளையாட்... மேலும் பார்க்க

சென்னை நகரில் காா்ஸ் மாா்க்ஸ் சிலை நிறுவ முடிவு: முதல்வா் ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டுக் கடிதம்

சென்னை நகரில் காா்ல் மாா்க்ஸ் சிலையை நிறுவும் முடிவுக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா கடிதம் எழுதியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் கைது!

ஆவடி: ஆவடி அருகே தனியார் நிறுவனத்தின் ரூ.1 கோடியிலான தரவுகளை திருடிய வழக்கில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த மருத்துவரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை(ஏப். 5) கைது செய்தனர். ஆவடி ... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் ரயில்வே அமைச்சர் திடீர் ஆய்வு!

ராமேசுவரம்: பாம்பன் பாலத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் சனிக்கிழமை(ஏப். 5) இரவு ஆய்வு மேற்கொண்டார்.பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகம் வருகைதர உள்ளார். இந்த ... மேலும் பார்க்க