பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி
குடும்பத் தகராறில் கணவா் தற்கொலை
குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் பாலமுருகன்(52). இவருக்கும், இவரது மனைவி நாகலெட்சுமி (46) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பாலமுருகன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.