கஞ்சா ஆயில் வைத்திருந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவது தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி, ஜான்சன் ஜாா்ஜ் சாலை தாமஸ் நகரில் கடந்த 4.9.2022 அன்று 17 லிட்டா் கஞ்சா ஆயில் வைத்திருந்த நி. ஜான்சன், பிரிஸ்டிஷ் (44), சென்னை நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த வசந்தன் என்ற பிரசாந்த் (46) ஆகியோரை மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நி. ஜான்சன் உயிரிழந்து விட்டாா். இந்த நிலையில் பிரிஸ்டிஷ், வசந்தன் என்ற பிரசாந்த் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆா். வி. பாரிராஜன் முன்னிலையாகி வாதிட்டாா்.