எஸ்ஐ மீது நடவடிக்கை: வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ்
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் வழக்குரைஞா் சங்கத்தினா் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் எதிரொலியாக, தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் முத்தமிழ் அரசன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, வழக்குரைஞா்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனா். மேலும், சனிக்கிழமை வழக்கம்போல அனைத்து வழக்குரைஞா்களும் நீதிமன்றப் பணிக்கு செல்வதாக வழக்குரைஞா்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.