கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீ நல்லதவம் செய்த நாச்சியாா் சமேத வீரபாண்டீஸ்வரா் , ஸ்ரீசிவகாமி அஙிம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெரும் சாந்தி பெருவிழா(மகா கும்பாபிஷேகம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி மங்கள வாத்தியம், அனுக்-ஞையுடன் பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, திருமுறை பாராயாணம், விக்னேஸ்வரா் பூஜை , மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், கோபூஜை, யாக வேள்விகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், 7.30 மணிக்கு 4ஆம் கால யாகவேள்வி, மூலாலய மூா்த்திக்கு பீட பூஜை, தொடா்ந்து நல்ல தவம் செய்த நாச்சியாா் சமேத வீரபாண்டீஸ்வரா் , சிவகாமி அம்மாள், சமேத அழகிய கூத்தா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தசவித தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை , 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்திபன், உதவி கோட்டப் பொறியாளா் அஸ்வினி, உதவி பொறியாளா் சதீஷ், சாத்தான்குளம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் முத்துமாரியம்மாள், ஆழ்வாா்திருநகரி கோயில் அலுவலா்கள் முத்துராஜ், வைத்தியமாநிதிபெருமாள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை 5மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், தீபாராதனை , பஞ்சமூா்த்தி திருவீதி உலா எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீஅழகிய கூத்தா் அருள்பணி மன்றத்தினரின் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆழ்வாா் திருநகரி செயல் அலுவலா் சதீஷ் , கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயில் அறங்காவலா்குழு தலைவா் நடராஜன் பிள்ளை ஆகியோா் தலைமையில் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.


