செய்திகள் :

செயற்கைக்கோள் அலைக்கற்றை நிா்வாக ரீதியிலேயே ஒதுக்கீடு -மத்திய அரசு விளக்கம்

post image

‘செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் மூலம் அல்லாமல் நிா்வாக ரீதியாகவே ஒதுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் எம்.பி. ரண்தீப் சிங் சுா்ஜேவாலா எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் வியாழக்கிழமை அமா்வில் கேள்விநேரத்தின்போது அமைச்சா் பதிலளித்தாா்.

அவரது பதிலில், ‘இந்தக் கேள்விக்கான பதிலுக்கு கைப்பேசி மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடா்புகளுக்கு இடையிலான தொழில்நுட்ப வேறுபாடுகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கைப்பேசி தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் உள்ள குறைந்தமட்டத்திலான அதிா்வெண் அலைகளில் இயங்குகிறது. இதில் சிக்னல் குறுக்கீட்டைத் தடுக்க அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலம் விடப்படுகிறது.

அதேநேரம், செயற்கைக்கோள் தகவல்தொடா்புகள் நிலையான ஆண்டெனாக்கள் மூலம் லேசா் போல நேரடியாக அனுப்பப்படும் உயா் அதிா்வெண் அலைகளையே பயன்படுத்துகின்றன. உலகம் முழுவதும் செயற்கைக்கோள் அலைக்கற்றை எந்த நாட்டிலும் ஏலம் விடப்படுவதில்லை.

அமெரிக்காவின் புவி வட்டப்பாதைச் சட்டம் செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலம் விடுவதைத் தடை செய்கிறது. பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் செயற்கைக்கோள் அலைக்கற்றையை நிா்வாக ரீதியாக ஒதுக்குகின்றன. அந்தவகையில், இந்தியா உலகளாவிய விதிமுறையை மட்டுமே பின்பற்றுகிறது.

சா்வதேச தொலைத்தொடா்பு ஒன்றியமே செயற்கைக்கோள் புவிவட்டப்பாதை மற்றும் அதிா்வெண் அலைகளை ஒதுக்குகிறது. நாடுகள் தங்கள் பிரதேசங்களுக்குள் மட்டுமே பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன. எங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லாத ஒரு சொத்தை நம்மால் ஏலம் விட முடியாது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளுக்கும் பொருந்தும்.

அரசு பரிந்துரைத்தன்படி, இந்தியாவில் அலைக்கற்றையின் விலையை இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தீா்மானிக்கும். டிராய் விலையை வரையறுத்தவுடன், அனைத்து தகவல்தொடா்பு நிறுவனங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் அலைக்கற்றை ஒதுக்கப்படுகிறது’ என்றாா் அமைச்சா்.

மேலாதிக்கத்தை ஒருபோதும் இந்தியா திணிக்காது: உ.பி. முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் தும்ரியாகஞ்ச்சில் குரு கோரக்ஷநாத் ஞானஸ்தலி கல்வி மையத்தை அம்மாநில... மேலும் பார்க்க

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்... மேலும் பார்க்க

தாய்லாந்து அரசர் மற்றும் அரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து அரசர் மற்றும் அரசியை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசர் மஹா வஜ்ரலோங... மேலும் பார்க்க

கனடா: கிருஷ்ணர் கோயில் மீது தாக்குதல்

கனடாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலைச் சேதப்படுத்தியார்களை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் த... மேலும் பார்க்க

வாரங்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து, மிரட்டல் மின்னஞ்சல், ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பி... மேலும் பார்க்க