கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு வி...
தங்கம் விலை இன்றும் உயர்வு! ரூ. 69,000-ஐ நோக்கி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது.
கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 66,880 விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள் ரூ. 67,600, செவ்வாய் ரூ. 68,080, புதன் ரூ. 68,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையும் சவரனுக்கு ரூ. 400 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் ஒரு கிராம் ரூ. 8,560-க்கு விற்கப்படுகிறது.
கடந்த நான்கு நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 அதிகரித்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளியில் விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,12,000-ஆக விற்கப்படுகிறது.