ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!
அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவின் மகன், சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி ,பெசன்ட் நகர் ,எம்.ஆர்.சி. நகர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.
அருண் நேரு எம்.பி. வீட்டிலும் சோதனை
அமைச்சர் கே. என். நேருவின் மகனும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!