சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணாமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஏப். 9) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) திருவாரூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: என்ன, இனி ஆதார் அட்டையே தேவையில்லையா?