சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
காட்பாடி - திருப்பதி இடையே மேலும் ஒரு ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, ரூ. 1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவிலான ஒற்றை ரயில் வழிப்பாதையானது, இரட்டை வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே, திருப்பதி - பாக்காலா - காட்பாடி இடையேயான ஒற்றை ரயில் பாதையை ரூ. 1,332 கோடியில் இரட்டை வழிப்பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் மூலம், இந்திய ரயில்வேவின் பாதை 113 கி.மீ. அதிகரிக்கும். 400 கிராமங்களைச் சேர்ந்த 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
இருவழிப் பாதை அமைக்கப்பட்டால் நிலக்கரி, விவசாயப் பொருள்கள், சிமெண்ட் என ஆண்டுக்கு 40 லட்சம் டன் சரக்குகள் கூடுதலாக கையாள முடியும்.