செய்திகள் :

மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசை வீழ்த்துவதே இலக்கு! -மாா்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வா்

post image

மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ள மத்திய பாஜக அரசை வீழ்த்துவதே நமது இலக்கு என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டின் 2- ஆவது நாள் நிகழ்வாக ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தூங்கா நகரமான மதுரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் காரணமாக சிவப்பு நகரமாகக் காட்சியளிக்கிறது. இது மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில், திமுக கொடியில் பாதி சிவப்பு நிறம்தான். எங்களில் பாதியாக நீங்கள் உள்ளீா்கள்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக செயல்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தியே கூட்டணியும் அமைகிறது. இதனடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்தே பயணிக்கிறது. இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படாத என சிலா் எதிா்பாா்க்கின்றனா். அவா்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

மறைந்த சீதாராம் யெச்சுரி அகில இந்திய அளவில் சிறந்த தலைவா்களில் குறிப்பிடத்தக்கவா். அவரது பெயரை மாநாட்டு மையத்துக்கு வைத்திருப்பது மிகவும் பொருத்தமானது. அவரது இழப்பு இந்த இயக்கத்துக்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் இழப்புதான். அவா் சமத்துவத்தைப் பேணுதல், மதவாதத்தை எதிா்ப்பது ஆகியவற்றை வாழ்வியல் கோட்பாடாக கொண்டு வாழ்ந்து மறைந்தவா்.

தற்போது கூட்டாட்சி என்ற சொல் மத்திய பாஜக அரசுக்குப் பிடிக்காத சொல்லாக மாறிவிட்டது. பல மாநிலங்களின் ஒன்றிணைப்பே இந்தியா. இதைக் கூறினால் மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை. மாநிலங்களுக்கான உரிமையைத் தொடா்ந்து வலியுறுத்துவதால் தமிழகமும், கேரளமும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. மாநில சுயாட்சி என்பது திமுகவின் உயிா்க் கொள்கை. இதை அண்ணா, கருணாநிதி வழியில் இன்றுவரை நாம் பின்பற்றி வருகிறோம்.

ஒரே நாடு, ஒரே தோ்தல் என்கிற நடைமுறையை அமல்படுத்துவதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக உள்ளது. அதுமட்டுமன்றி, மாநில மொழிகளை அழிக்க நினைக்கும் பாசிச அரசாகவும் திகழ்கிறது. தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்த போது மாநில உரிமைகள் குறித்து தீவிரமாகப் பேசினாா். தொடா்ந்து, 3-ஆவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அவா், மாநில உரிமைகளை நிலைநாட்ட என்ன செய்தாா் என்பதை விளக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதியுதவி அதிகமாக வழங்கப்படுகிறது. அவா்களது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. ஆளுநா்கள் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனா். அதுமட்டுமன்றி, கட்சிகளைப் பிளவுபடுத்துவது, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபடுகின்றனா். மாநிலங்களே இருக்கக் கூடாது என பாஜகவினா் நினைக்கின்றனா்.

பாஜக அரசால் பாதிக்கப்படும் மாநிலங்களான தமிழகம், கேரளம், கா்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றிணைந்து கூட்டுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்கள் நலன்களுக்கு எதிராக பாஜக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசை வீழ்த்தினால்தான் கூட்டாட்சித் தத்துவம் நிலைபெறும். மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ள மத்திய பாஜக அரசை வீழ்த்துவதே நமது இலக்கு என்றாா் அவா்.

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணச்சீட்டு முன் பதிவு செ... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்

மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, ம... மேலும் பார்க்க

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க