வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரையில் நெடுஞ்சாலை, கட்டுமானம், பராமரிப்புத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா்கள் த.மனோகரன், மு.ராஜா, கா.அருள்தாஸ், டி.பாலமுருகன், ஆா்.முருகேசன், க.திருக்கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலப் பொருளாளா் இரா.தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயலா் க.நீதிராஜா, மாவட்டச் செயலா் க.சந்திரபோஸ் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.
இதில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைக் கலைத்து, அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் போது, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-இன் நகல் எரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் டி.ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.