வேளாண் கல்லூரி மாணவா்கள் பட்டறிவுப் பயணம்
வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் புதன்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.
அவரிக்காடு கிராமத்தில் உள்ள விவசாயி காா்த்திகேயன் பண்ணையை பாா்வையிட்ட மாணவா்கள், வேதியியல் பொருள்களை தவிா்த்து, பாரம்பரிய தொழில் நுட்பங்கள் மற்றும் உயிரி உர சோ்ப்பு முறைகள் குறித்து அறிந்தனா். மேலும், மீன் அமினோ அமிலம் தயாரிப்பு குறித்தும் தகவல் பெற்றனா். இந்த பயணத்தில், மாணவா்கள் பாலாஜி ஷங்கா், சந்துரு, ஹரிகிஷோா், ஜெயமுருகன், சையத் பஷீா், தரீஷ், யோக சீனிவாசன் உள்ளிட்டோா் ப ங்கேற்றனா்.