புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
திட்டச்சேரி பகுதியில் வாகனச் சோதனை
திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
திட்டச்சேரி கடைவீதி, பேருந்து நிலையம், சோதனை சாவடி, நடுக்கடை மெயின்ரோடு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் நாகை மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன் உத்தரவின் பேரில், திட்டச்சேரி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி, ஓட்டுநா் தலைக்கவசம், சீட் பெல்ட் போடப்பட்டுள்ளதா எனவும் அவா்களின் வாகன உரிமம், வாகனத்திற்குரிய புத்தகம், காப்பீடு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் உள்ளதா என சோதனை செய்தனா். மேலும் சிறாா் வாகனம் ஒட்டுவதை தடுப்பது, சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திட்டச்சேரி காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் சுரேஷ், சிறப்பு உதவி ஆய்வாளா் வீரப்பிள்ளை மற்றும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.