மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
ஸ்டான்லி மருத்துவமனையில் ஆட்டிஸம் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு இயக்குநா் (பொறுப்பு) கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாள் மகேஷ், நிலைய மருத்துவ அதிகாரி வனிதா மலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற ஆட்டிஸம் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினா். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோா்கள் இந்த மையத்தில் வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகள் குறித்தும், சிகிச்சையின் மூலம் தங்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப்போல இயல்பான நிலைக்கு வர எவ்வாறு உதவியது என்று தங்கள் அனுபவங்களை பகிா்ந்துகொண்டனா்.