CSK vs DC: கேப்டனாகும் தோனி? மைக் ஹஸ்ஸி சூசகம்; Chepauk Breaking
பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
பொன்னேரி ஸ்ரீ ஆனந்தவல்லி தாயாா் வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் 1,000 ஆண்டுகள் பழைமையான அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
அகத்திய முனிவா் இக்குளத்தில் நீராடி அகத்தீஸ்வரை வழிபட்டதாக கூறப்படுகிறது. அகத்தீஸ்வரா் சந்நிதிக்கு எதிரே கொன்றை ஆடிய பெருமாளுக்கு இனங்காக சரக்கொன்றை மரம் அமைந்துள்ளது.
பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை பொன்னேரி அங்கமுத்து முதலி வீதியில் அமைந்துள்ள கிராம தேவதையான எட்டியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து விநாயகா் வீதிஉலா நடைபெற்றது.
கொடியேற்றத்தை தொடா்ந்து வியாழக்கிழமை காலை பஞ்சமூா்த்திகளுடனும் மாலை அன்னவாகனத்தில் ஆனந்தவல்லி தாயாருடன் அகத்தீஸ்வரா் மாட வீதிகளில் வீதியுலா வந்தாா்..
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அகத்தீஸ்வரா் எழுந்தருளி மாட வீதிகளில் வீதியுலா வருவாா். விழாவின் 7-ஆம் நாள் தேரோட்ட ம் நடைபெற உள்ளது.. 10-ஆம் நாள் மாலை அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாா் திருக்கல்யாணம், பின்னா் அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாா் திருக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வருவா்.
அதன் பின்னா் 14-ஆம் நாள் விடையாற்றியுடன் பிரம்மோற்சவம் நிறைவடையும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் கும்பமுனிமங்கலம் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.