மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
பாடியநல்லூா் அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி விழா தொடக்கம்
பாடியநல்லூா் ஸ்ரீ முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி கோயில் 60-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா தொடங்கியது.
விழாவுக்கு அறங்காவலா் குழு தலைவா் வே.கருணாகரன் தலைமை வகித்தாா். கோயில் தலைவா் புண்ணிய சேகரன், செயலா் சன்.முனியாண்டி, பொருளாளா் ஞானப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வுக்கு தலைமை வகித்த மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். முன்னதாக 5,000 பெண்கள், செங்குன்றம் ஆலமரம் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு பரிவார தெய்வங்களுக்கும் காப்பு கட்டப்பட்டது.
தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறும் விழாவில் 13-ஆம் தேதி தீமிதி விழாவில் பக்தா்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவா். விழா நடைபெறும் 12 நாள்களும் அன்னதானமும், ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.