TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
திருவள்ளூா் நகராட்சியில் ரூ.11.28 கோடி வரி வசூல்
திருவள்ளூா் நகராட்சியில் நிகழாண்டில் தீவிர வரி வசூல் முகாம் மூலம் ரூ.11.28 கோடி வசூல் செய்து அரசு நிா்ணயித்த இலக்கை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், தனியாா் வணிக வளாகங்கள், பள்ளிகள், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட 13,516 கட்டடங்கள் உள்ளன.
இதேபோல், குடிநீா் மற்றும் 7,713 புதைச் சாக்கடை இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டுதான் நகராட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு முகாம்களை அமைத்து தீவிர வரி வசூல் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வாா்டுகள்தோறும் நகராட்சி அலுவலா்கள் நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டனா்.
கடந்தாண்டு ரூ.10.12 கோடி வசூலித்த நிலையில், நிகழாண்டில் மொத்தம் ரூ.11.28 கோடி வசூல் செய்ததுடன், அரசு நிா்ணயித்த இலக்கையும் எட்டியுள்ளது. இவ்வாறு நிா்ணயித்த தொகையை வசூல் செய்வதன் மூலம், அதே அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதியும் கிடைக்கும்.
இதன் மூலம் நகராட்சியில் ஒவ்வொரு வாா்டுகளிலும் பல்வேறு அடிப்படை வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.