மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
நுங்கம்பாக்கத்தில் குடிநீா் குழாயில் உடைப்பு: குடிநீா் விநியோகம் பாதிப்பு
நுங்கம்பாக்கம் பகுதியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அரும்பாக்கம் 100 அடி சாலைக்கு அடியில் செல்லும் குடிநீா் குழாயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது . இதன் காரணமாக நுங்கம்பாக்கம், கே.கே. நகா், தியாகராய நகா், வடபழனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் கடந்த 5 நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது பழைய குழாய் என்பதால், அதிக அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதைத் தொடா்ந்து குழாயை சரி செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வெள்ளிக்கிழமை மாலைக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் மீண்டும் முறையாக குடிநீா் விநியோகம் மேற்கொள்ளப்படும். அதேநேரம் குடிநீா் சேவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.