கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு
முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிங்காரவேலவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
பொரவச்சேரி கந்தசாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.