ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வந்தவாசியில் உள்ள ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துவஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
கோயில் அா்ச்சகா்கள் பி.ரங்கநாதன், எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் பூஜைகளை நடத்தினா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக புதன்கிழமை இரவு ஸ்ரீசெல்வா் உற்சவம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றன.