கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்
திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் துறைகள் சாா்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜி.சசிக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் வி.எஸ்.குணசேகரன், துணைத் தலைவா் எம்.வினோத், செயலா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் வி.கே.புனிதவதி வரவேற்றாா்.
கடலூா் துய வளனாா் கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் (வங்கி மேலாண்மை) துறைப் பேராசிரியா் ஆா்.புண்ணியசீலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, ‘வணிகத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற தலைப்பில் பேசினாா்.
இதில், கல்லூரிப் பொருளாளா் சி.எஸ்.துரை, இயக்குநா் ஜி.அருண், பேராசிரியா் லாவண்யா மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.