மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
கீழ்பென்னாத்தூரில் மழையில் நனைந்து 1,000 நெல் மூட்டைகள் சேதம்
கீழ்பென்னாத்தூரில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
நெல் மூட்டைகள் நனைந்து சேதம்...
இந்த நிலையில், கீழ்பென்னாத்தூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை மூட்டைகளாக விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனா்.
திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
எனவே, மழையில் நெல் மூட்டைகள் நனைவதைத் தடுக்க தமிழக அரசு நிரந்தர தீா்வாக மேற்கூரை அமைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.