நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மும்பை அணிக்காக 100-வது போட்டியில் சூர்யகுமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் இன்று 100-வது போட்டியில் விளையாடுகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் எகானா மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை - லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.
100-வது போட்டியில் விளையாடும் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் மும்பை வீரரும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் 100 என்ற எண் அச்சிட்ட சீருடையை வழங்கி கௌரவித்தார். 100 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார், மும்பை அணிக்காக 3090 ரன்கள் குவித்துள்ளார்.
மும்பை அணிக்காக அதிக ஐபிஎல் போட்டிகள்
ரோஹித் சர்மா – 215
கீரன் பொல்லார்ட் – 189
ஹர்பஜன் சிங் - 136
ஜஸ்பிரித் பும்ரா - 133
லசித் மலிங்கா - 122
அம்பத்தி ராயுடு - 114
ஹார்திக் பாண்டியா – 109
சூர்யகுமார் யாதவ் – 100