செய்திகள் :

நூர் அகமதை பாராட்டிய இந்திய சுழற்பந்துவீச்சாளர்!

post image

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதை இந்திய அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பாராட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான நூர் அகமது, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நூர் அகமது தனது அபார பந்துவீச்சின் மூலம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

குல்தீப் யாதவ் பாராட்டு

சிஎஸ்கே அணிக்காக நூர் அகமது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையில், நூர் அகமது அனைவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக குல்தீப் யாதவ் அவரை பாராட்டியுள்ளார்.

இதையும் படிக்க: மும்பை அணிக்காக 100-வது போட்டியில் சூர்யகுமார் யாதவ்!

நூர் அகமது குறித்து குல்தீப் யாதவ் பேசியதாவது: நூர் அகமது மிகவும் நன்றாக பந்துவீசுகிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக தெரியும். அவர் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள விரும்பும் நபர். போட்டி நிறைவடைந்த பிறகு இரவு நீண்ட நேரம் நாங்கள் பேசியிருக்கிறோம். நூர் அகமதுவுடன் அமர்ந்து லெக் ஸ்பின் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். நூர் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கும். அதனால், அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் அவ்வளவு எளிதாக ரன்கள் குவித்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் திடலில் அவரது பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் திடலில் நாளை (ஏப்ரல் 5) நடைபெறும் போட்டியில் தில்லி கேபிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.

மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாகிறாரா எம்.எஸ்.தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி செயல்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் 17-வத... மேலும் பார்க்க

மார்ஷ், மார்க்ரம் அதிரடி: மும்பை இந்தியன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

மும்பை அணிக்காக 100-வது போட்டியில் சூர்யகுமார் யாதவ்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் இன்று 100-வது போட்டியில் விளையாடுகிறார்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் எகானா மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை - லக்னௌ அணிகள்... மேலும் பார்க்க

லக்னௌக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; அணியில் ரோஹித் சர்மா இல்லை!

லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸ் ஹாட்ரிக் தோல்விக்கு நம்பிக்கையூட்டிய தலைமைப் பயிற்சியாளர்..! பதக்கங்கள் வழங்கல்!

கொகத்தாவுக்கு எதிரான போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அதன் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசினார். முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20... மேலும் பார்க்க

அதிரடி பேட்டிங் என்றால் என்ன? வெங்கடேஷ் ஐயரின் முழுமையான பேட்டி!

அதிக விலைக்கு வாங்கியதால் எல்லா போட்டிகளிலும் ரன்கள் குவிக்க முடியுமா என வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். சன்ரைசர்ஸ் அணியுடனான் போட்டியில் கேகேஆர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப்... மேலும் பார்க்க