ஆரணி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கலோகியம் 2025 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, எம்ஜிஆா் பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், தனிஅலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் வெங்கடரத்தினம் வரவேற்றாா். எ
எம்ஜிஆா் பல்கலைக்கழக இணைப்பதிவாளா் பெருவழுதி கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசுகையில், இந்தத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களும், வளா்ச்சிகளும் மாணவா்களின் திறமைக்கு சவாலாக இருக்கும் என்பதால் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
கருத்தரங்கில் மொத்தம் 23 தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவா்கள் தங்களுடைய திறமைகளையும், கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தினா். மேலும், 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 950 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
கருத்தரங்கில் ஏ.சி.எஸ். குழுமக் கல்லூரி முதல்வா்கள் டி.இளங்கோ, வி.கந்தசாமி, பிரபு, கல்லூரி துறைத் தலைவா்கள் கே.சிவா, எஸ்.விஜயகுமாா், சந்திரகுமாா், பூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் பேராசிரியை சுகன்யா நன்றி கூறினாா்.