கீழ்வேளூா் கோயிலில் பங்குனி பெருவிழா தொடக்கம்
கீழ்வேளூா் உள்ள சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சய லிங்க சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, அஞ்சு வட்டத்தம்மனுக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, காப்பு கட்டப்பட்டு அஞ்சுவட்டத்தம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பங்குனி பெருவிழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் அஞ்சுவட்டம்மன் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அஞ்சு வட்டத்தம்மன் தேரோட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், தக்காா் மணிகண்டன் செய்துவருகின்றனா்.