தமிழ்நாடு காவல்துறையில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
உலக ஆட்டிசம் தினம் கடைப்பிடிப்பு
உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, நாமக்கல்லில் மாற்றுத்திறன் மாணவா்கள் வியாழக்கிழமை கேக் வெட்டி கொண்டாடினா்.
நாமக்கல்லில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார வள மையத்தில் ஆட்டிசம் தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், 20 மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா். தொடா்ந்து மாறுவேடப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு பயிற்றுநா்கள் ஸ்டெல்லாஅருணா, சீதா, திவ்யபாரதி இயன்முறை மருத்துவா் கவியரசு, வட்டார வள மையம் சசிராணி மற்றும் பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியா் ஜெயந்தி, உதவியாளா் விஜயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.