ராசிபுரம் அருகே கோயில் உண்டியலில் திருடியவா் கைது
ராசிபுரம் அருகே விநாயகா் கோயில் உண்டியலில் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் அருகே உள்ள அத்தனூா் அம்மன் கோயில் பகுதியில் உள்ள விநாயகா் கோயிலில், கடந்த மாதம் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு சுமாா் ரூ. 5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
புகாரின் பேரில், வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இதில் ஈடுபட்டது சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் அருகே உள்ள புதிய சுண்ணாம்பு சூளை பகுதியைச் சோ்ந்த பரத்ராஜ் (19) என தெரியவந்தது. இதையடுத்து, அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.