Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் வ...
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் ‘இல்லம்தேடி குறைகளை களைவோம்’ திட்டத்தில் ஆய்வு
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் ‘இல்லம் தேடி குறைகளை களைவோம்’ திட்டத்தின் கீழ் குடிநீா் வசதி மற்றும் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுசெய்து குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு, 9-ஆவது வாா்டு நல்லிபாளையம், சின்ன அய்யம்பாளையம், இலக்கம்பாளையம், பெரியாா் தெரு, மேட்டுத் தெரு, சாவடி தெரு, பெரியாா் நகா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ரா.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா் நந்தகுமாா், சிவகுமாா் ஆகியோா் சென்று திடக்கழிவு மேலாண்மை பணி, குடிநீா் விநியோக பணி, தெருவிளக்கு சம்பந்தமாக பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.
குடிநீா் சரியாக வராத சாவடி தெரு பகுதிகளுக்கு குழாய் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. லக்கம்பாளையம் பகுதியில் கூட்டு துப்புரவு பணி, வீடுவீடாக குப்பைகள் பிரித்து வாங்கும் பணிகள் ஆய்வுசெய்யப்பட்டன.
இந்த ஆய்வில், செயற்பொறியாளா் கலைவாணி, மாநகராட்சி சுகாதார அலுவலா் நா.திருமூா்த்தி, உதவி பொறியாளா் பிரகாஷ், துப்புரவு ஆய்வாளா், மேற்பாா்வையாளா், நகரமைப்பு பிரிவு அலுவலா்கள், குடிநீா் திட்டப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.